Senpakam Foundation

வணக்கம்!

செண்பகம் அறக்கட்டளைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

சமூக பொருளாதார அரசியல் பண்பாடு சார்ந்த அர்த்தமுள்ள வாழ்வியல் தேவைகளை இடையறாது பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவர்கள் முதியோர்கள் இயலாமையுள்ள நபர்கள் ஆகிய நபர்கள் சமூகங்களின் உரிமைகளை அலட்சியம் செய்யாத ஓர் இலட்சிய உலகு.

மகுட வாசகம்

உரிமைக்காக செல்வோம் உறுதியாக வெல்வோம்
எங்களை பற்றி

செண்பகம் அறக்கட்டளை அல்லது செண்பகம் மன்றம்

அறக்கட்டளையின் செயற்பாட்டு பிரதேசங்களில் நலிவுற்ற நலிவுற்றுக்கொண்டிருக்கின்ற மற்றும் எதிர்காலத்தில் நலிவுற அதிகம் வாய்ப்புகள் காணப்படுகின்ற இலக்குக்குழுவினரை குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள்
மற்றும் இயலாமையுள்ள நபர்களை இனங்காணலும் அவர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்தலும்
அறக்கட்டளைக்கு கிடைத்தகு வளங்களுக்கு எற்ப அவற்றுள் முன்னுரிமைப்படுத்தலும் முன்னுரிமை
அடிப்படையில் இயலுமான விரைவில் தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஆதரவளித்தலும்.

தூர தரிசனம்

imagesசமூக பொருளாதார அரசியல் பண்பாடு சார்ந்த அர்த்தமுள்ள வாழ்வியல் தேவைகளை இடையறாது பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறுவாக் ள் முதியோர்கள் இயலாமையுள்ள நபர்கள் ஆகிய நபர்கள் சமூகங்களின் உரிமைகளை அலட்சியம் செய்யாத ஓர் இலட்சிய உலகு.

நோக்கம்

எங்கள் நோக்கமும் குறிக்கோள்களும்

அறக்கட்டளை நீண்ட காலத்தில் அடைய விரும்பும் விளைவுகள் நோக்கம் எனவும் குறுங்கால மற்றும் நடுத்தரகால அளவில் அடைய விரும்பும் பெறுபேறுகள் குறிக்கோள்கள் எனவும் கொள்ளப்படுகின்றன அவ்வழியில் நோக்கம் குறிக்கோள்களினின்றும் வேறுபடுகின்றது.

கல்வி

அவசியமான சிறார்களுக்கு அவசியமான கல்வி ஆதரவுகளை வழங்குவதன் மூலம் சிறாhக் ளின் கல்வியுரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்

ஆரோக்கியம்

அவசியமான முதியோர்களுக்கு அவசியமான ஆரோக்கியமான வசதிகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்

புனர்வாழ்வு

அவசியமான முதியோர்களுக்கு அவசியமான ஆரோக்கியமான வசதிகளை வழங்குவதன் மூலம் முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்

எங்கள் விழுமியங்கள்

செண்பகம் அறக்கட்டளையின் பின்வரும் 10 விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கி வருகின்றது.

images
01.

தனிமனித கௌரவம்

அறக்கட்டளை ஒவ்வொரு மனிதருக்கும் தனி மனித கௌரவம் உணடு; என்பதை ஏற்றுக்கொள்கின்றது மனிதனை மனிதனாக மதிக்க வேண்டுமென்ற மனித மாண்பியம் இதனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே அறக்கட்டளையினை நாடிவரும் எவரும் அவர் உதவியை நாடுகின்றவர் என்பதற்காக இழிவாக நோக்கப்படமாட்டார்கள்.

02.

உரிமைக்களுக்கு மதிப்பு

ஒவ்வொரு மனிதரும் சமமான மனித உரிமைகளை அனுபவிக்க உரித்துடையவர்கள் எனப் தை அறக்கடட் ளை எற்றுக்கொள்கிறது ஆகவே அவரவர் மனித உரிமைகளுக்கு மன்றம் மதிப்பளிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறக்கட்டளை ஒருவரின் உரிமையை மீறமாட்டாது.

03.

பாரபட்சமின்மை

அறக்கட்டளை சேவைகளை வழங்கும்போது தனது இலக்குக்குழுவிற்குள் இன மத மொழி பால் சாதி அடிப்படைகளில் அல்லது வேறு எந்தவோர் அடிப்படையிலும் மனிதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதில்லை தனது இலக்குக்குழவினர் அல்லாதோருக்கு அறக்கட்டளையின் சேவைகள் வழங்கப்படுவதில்லை அது பாரபட்சமாகக் கருதப்படுவதில்லை.

04.

வெளிப்படைத்தன்மை

அறக்கட்டளை தனது எல்லா செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்கிறது எந்தவொரு பொதுமகனும் அறக்கட்டளையின் செயற்பாடுகள் பற்றி அறக்கட்டளையிடம் கேட்டுத்தெளிவுகொள்ள முடியும் அதுபோல உரிய அரச தரப்பினர் வினவும் போது அறக்கட்டளை பற்றிய தகவல்களை வழங்க தயாராக இருக்கின்றது

05.

சமூக வகைகூறல்

இதுஒருபொதுமக்கள் தாபனம் என்பதையும் அதன்எந்தவொரு செயலாலும் சமூகதத் pற்கு எற்படும்நன்மையானது தீமையானதுமான விளைவுகளுக்கு அறக்கடட் ளையே பொறுப்பாகும் என்பதனை எற்றுக்கொள்கின்றது.

06.

சூழலுக்கு ஊறு விளைவிக்காமை

சூழலை பாதுகாக்கும் பொறுப்பு அறக்கட்டளைக்கு இருக்கின்றது. எனவே தனது செயற்பாடுகளால் சூழலுக்கும் சுற்றாடலுக்கும் எந்தவொரு பாதிப்பும் எற்படுவதை அது தவிர்த்துக்கொள்கிறது செயற்பாடுகளின் ஒவ்வொரு கட்டதத் pலும் சூழலுக்கு தீங்கு எற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

07.

மனிதருக்கு தீங்கு பயக்காமை

சூழலைபோலவே சக மனிதர்களை பாதுகாக்கும் பொறுப்பும் அறக்கட்டளைக்கு உண்டு எனவே அது தனது செயற்பாடுகளால் மனிதருக்கு தீங்கு நேரிடும் வணண் ம் நடந்து கொள்வதில்லை இதனால் அறக்கட்டளை செயற்பாடுகளால் மனிதர்கள் பாதிக்கப்படாமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

08.

சட்டங்களுக்கு மதிப்பு

அறக்கட்டளை தனது யாப்பில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் மதித்து நடக்கிறது அதுபோலவே நாட்டின் சகல சடட் ங்களுக்கும் அது கீழ்ப்படிகினற் து. அதன் செயற்பாடுகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதில்லை .

09.

வாக்குறுதிகளின் பாதுகாப்பு

எந்தவொரு தரப்பினாருக்கும் அறக்கட்டளை தான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு தானே பொறுப்பாகினற் து. அதனை வேறு தரப்பினருக்கு பாரப்படுத்தல் செய்வதில்லை.

10.

பொது ஒழுக்கக்கோட்பாடுகள்

சகல பொது ஒழுக்கங்களையும் பின்பற்றும் கடப்பாடு அறக்கட்டளைக்கு இருக்கின்றது எடுத்துக்காட்டாக பொய் உரையாமை களவு செய்யாமை ஊழல் மோசடிகளில் ஈடுபடாமை போனற் பொது ஒழுக்கங்கள் அறக்கட்டளைக்கும் பொருந்துகின்றன அத்தகைய பொது ஒழுக்கங்களை மீறுவதானால் எற்படும் விளைவுகளுக்கு அறக்கட்டளையே பொறுப்பாகின்றது.

நிகழ்வுகள்

செண்பகம் அறக்கட்டளையின் நிகழ்வுகள்

செய்திகள்

செண்பகம் அறக்கட்டளையின் செய்திகள்

வாட்ஸ்அப் தொடர்புக்கு
1