அறக்கட்டளை தனது இலக்குக்குழுக்களுக்கான சேவையை தொடர்ந்து வழங்கி வரவேண்டுமாயின் அது
நிலைபேறு தன்மையைக்கொண்டதாக இருத்தல் மிக அவசியம். அது நிலைபேறு தனi; மயைக்கொண்டிருக்க
அதன் வருமான மூலகங்கள் உறுதிப்படுத்தப்பட்டனவாக இருத்தல் இன்றியமையாததாகும். எனவே
அறக்கட்டளை வருமான அதிகரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக
முல்லைத்திவு அம்பாள்புரம் கிராமத்தில் இருவருடங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட 2 ஏக்கர்
காணியில் பயிர்ச்செய்கை பண்ணை ஓன்றை அது நிர்மாணித்து நடாத்தி வருகின்றது. நீண்ட காலத்தில்
அதனை வருமானம் ஈட்டும் ஒரு தென்னந்தோடட் மாகவும் கால்நடைப் பண்ணையாகவும் ஊடுபயிர்கள்
செய்யும் தோட்டமாகவும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பண்ணை இதற்கிணங்க
தற்போது சிறிய அளவில் தென்னை மற்றும் ஊடுபயிர்கள் செய்கையை ஆரம்பித்துள்ளதோடு சிறியளவில்
ஆடு மாடுகள் கோழி கால்நடை வளாப்பினையும் தொடங்கியுள்ளது.
ஏதிர்காலத்தில் வருமான அதிகரிப்பிற்காக சிறுகைத்தொழில்களை ஆரம்பிக்கும் திட்டங்களையும் அறக்கட்டளை
வகுத்துள்ளது.