முதியோர்களைப் பொறுத்தவரையில் அறக்கட்டளை அவர்களது பொழுதுபோக்கிற்கு அதிக கவனம் செலுத்தி
வருகின்றது. இதனால் அறக்கட்டளையே முதியோர் பொழுதுபோக்கு நிலையம் ஒன்றை நடத்தி வருகினற் து
தமது பொழுதினை பயனுள்ள வழிகளில் செலவிட விரும்பும் முதியவர்கள் காலையில் இங்கு வந்து
மாலையில் வீடு திரும்புகின்றனர். நிலையத்தில் சக முதியோர்களுடன் அளவளாவுவதில் அவர்கள் பெரும்
மகிழ்வடைகின்றனர் பத்திரிக்கைகள் தொலைக்காட்சிப்பெட்டி, வானொலி பெட்டி, உள்ளக விளையாடடு;
உபகரணங்கள் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் உட்பட
தேநீர் சிற்றுணடி; மதிய போசனம் என்பனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.